ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா சிறப்பு :-
ஐஎன்எஸ் விக்ரமாதித்யா (சமஸ்கிருதம்: विक्रमादित्य, Vikramaditya, "Brave as the Sun") ஆனது முன்னாள்சோவியத் ஒன்றியத்தின் வானூர்தி தாங்கிக் கப்பலான அட்மிரல் கோர்ஷ்கோவ் கப்பலின் புதிய பெயராகும். இது இந்தியாவால் இந்தியக் கடற்படைக்காக வாங்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுக்குப் பிறகு விக்ரமாதித்யா முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் நடைபெறும் விழாவில், இக்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்படுகிறது.
விக்ரமாதித்யா 1978-1982ல் கருங்கடல் கப்பல் கட்டும் தளம், மிகொளைவ், உக்ரைனில் கட்டப்பட்ட கிவ் வகுப்பு வானூர்தித் தாங்கிக் கப்பலின் மாறுதல் செய்யப்பட்ட கப்பல் ஆகும். இந்தக் கப்பல் தற்போது உருசியாவின் செவ்மாஷ் கப்பல் கட்டும் தளத்தில் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது ரூ.14,483 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
- கப்பலின் மொத்த எடை 44,500 டன்கள்.
- நீளம் - 284 மீட்டர்
- உயரம் - 60 மீட்டர்
- நீர்மூழ்கிக் கப்பல்களை தேடிச் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகள் 28
- 20க்கும் மேற்பட்ட மிக்-29 கே ரக விமானங்களை தாக்கி செல்லும் திறன்
- கண்காணிப்பை மேற்கொள்வதற்கு உதவியாக 10 ஹெலிகாப்டர்களை சுமந்துச் செல்லும்.
- போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகள்
- இந்தக் கப்பலால், தன்னை சுற்றியுள்ள 700 கடல் மைல்கள் தொலைவுக்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியும்.
- 1,600-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு இயங்கும்.
- ஒரே சமயத்தில் 7,000 முதல் 13,000 கடல் மைல்கள் பயணம் செய்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியும்
No comments:
Post a Comment