தமிழ்நாட்டு வானம்பாடி முடியரசன் (துரை ராசு) !
வாழ்க்கைக் குறிப்பு :
சிறப்புகள் சில :-
வாழ்க்கைக் குறிப்பு :
இயற் பெயர் : துரை ராசு
பிறப்பு : 07-10-1920
ஊர் : மதுரையை அடுத்துள்ள பெரியகுளம்
பெற்றோர் : சுப்புராயலு, சீதாலட்சுமி
சிறப்பு பெயர்கள் :
கவியரசு (பறம்பு மலையில் நடைபெற்ற விழாவில் குன்றக்குடி அடிகளார் அவர்களால் வழங்கப்பட்டது)
தமிழ்நாட்டு வானம்பாடி (அறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்டது)
நூல்கள் :
முகில் விடு தூது
தாலாட்டுப் பாடல்கள்
கவியரங்கில் முடியரசன்
முடியரசன் கவிதைகள்
பாடுங்குயில்
காவியப்பாவை
ஞாயிறும் திங்களும்
மனிதனைத் தேடுகிறேன்
பூங்கொடி (தமிழ் தேசிய காப்பியம், 1996-ல் தமிழக அரசின் பரிசு பெற்றது)
வீர காவியம் (தமிழ் வளர்ச்சி கழகத்தின் பரிசு பெற்றது)
நெஞ்சு பொறுக்குதில்லையே
சிறப்புகள் சில :-
காரைக்குடி மீனாட்சி சுந்தரம் உயர் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
தமிழில் பிற மொழி கலப்பதை வன்மையாக கண்டித்தார்.
தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகினார்.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.
தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று உரைத்து அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.
தமிழ் மொழி வளர தமிழை வாழ்த்தி இவர் பாடும் பாடல் நம்மை தமிழ்ப்பற்றுக்கு இலக்காக்கி ஈர்த்துச் சென்றுவிடும்.
"தாயே உயிரே தமிழே நினைவணங்கும்
சேயேன் பெறற்கரிய செல்வமே - நீயே
தலைனின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீ இங்கு
இலை என்றால் இன்பம் எனக்கு ஏது?
முடியரசன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு கலைஞர் விருதும் 1987 ஆம் ஆண்டு பாவேந்தர் விருதும் 1998 ஆம் ஆண்டு கலைமாமணி விருதும் 1993 இல் அரசர் முத்தையாவேள் அவர்களின் நினைவுப் பரிசும் பெற்றார்.
இவரின் படைப்புகள் சாகித்திய அகாதெமியினால் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் இவருடைய படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளதோடு படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
திரைப்படங்களுக்குப் பாடல் மற்றும் கதை வசனம் எழுதி திரைத்துறைக்கு அரும்பணியாற்றினார். சில காலம் மதுரை காமராசர் பலகலைக்கழகத்தின் தமிழியற் துறையில் பணியாற்றியுள்ளார்.

No comments:
Post a Comment