Monday, 30 June 2014

நிலங்கள் நம் நிஜங்கள் :

நம் இருப்பிடம் நாம் வாழும் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகத்தான் இன்றளவும் இருக்கிறது. நிலங்கள் தான் நம் நிஜங்களை அப்பட்டமாக மற்றவர்களுக்கு தெரிவிக்கிறது. நாம் அறிந்த சில நிலங்களின் நிஜங்கள் உங்களுக்காக படித்து பயன் பெறுங்கள்.
" ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும், நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக் கூறுகளும் அந்த இனம் சார்ந்திடும் நிலத்தன்மை, தட்பவெட்ப நிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும்" என குரோஸ் ஹோட்ஜ் (Grose Hodge) எனும் நிலவியல் அறிஞர் குறிப்பிடுவார். இக்கூற்று பண்டைத் தமிழர்களுக்கு முற்றிலும் பொருந்தும்.ஐந்து வகை நிலப்பாகுபாட்டுடன் வாழ்ந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கை, செய்த தொழில், வழிபாடு ஆகியவை ஹோட்ஜின் கருத்தை உறுதிப்படுத்தும்.

ஐந்து வகை நிலங்கள் :- மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி நிலம் என்று அழைத்தனர். மலைக்கு அடுத்து இருந்த நிலப்பகுதி காடும், காட்டைச் சார்ந்த இடமும். இப்பகுதியை முல்லைநிலம் என்று கூறினர். முல்லைக்கு அடுத்து இருந்த வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்று குறிப்பிட்டனர்.பண்டைத் தமிழ்நாட்டின் கிழக்கும், மேற்கும், தெற்கும் கடல் எல்லையாக இருந்தது. இந்தக் கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்றனர். பருவகாலத்தில், பெய்ய வேண்டிய மழை பெய்யாமல், வறட்சி ஏற்பட்டு, நிலம் பசுமை இல்லாமல் வரண்டு இருக்குமானால் அப்பகுதியைப்பாலை என்று சுட்டினார்கள்.இந்த ஐவகை நிலங்களிலும் கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, நாகரிகம் எல்லாம் வேறு வேறாக காணப்படும்.

பொதுவாகத் தமிழகத்தின் புவியியல் அமைப்புகளை உற்று நோக்கும்போது தோற்ற அமைப்பில் இது தலைகீழாக அமைந்த முக்கோணம் போலவே காட்சியளிக்கிறது. தரைத் தோற்ற அமைப்பிலும் பொதுவாகக் கிழக்கே சரிந்துதான் உள்ளது. வட இந்தியாவில் உள்ளது போன்று மிக உயர்ந்த மலைகளோ, மிக நீண்ட ஆறுகளோ, தார்ப்பாலைவனம் போல் அகன்ற மணற்பாலை நிலங்களோ இல்லாத ஒரு பகுதியாகவே தமிழகம் விளங்குகிறது. இது நிலநடுக் கோட்டின் வடக்கில் வெப்ப மண்டலத்தில் அமைந்திருப்பதாலும், மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருப்பதாலும், கடலிலிருந்து பருவக்காற்று வீசுவதாலும் சம தட்பவெப்ப நிலையை உடையதாக விளங்குகிறது.
பழந்தமிழர் ஓர் ஆண்டின் காலநிலையை ஆறு பிரிவுகளாகப் பிரித்துப் பார்த்தனர். இவை முறையே கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் ஆகும்.
தமிழகத்திலுள்ள மலைத் தொடர்கள், குன்றுகள், காடுகள், ஆறுகள் ஆகியன இந்நிலப்பகுதியைப் பல்வேறு கூறுகளாகப் பிரித்துள்ளன. இதனையே சங்க இலக்கியங்களில் வரும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் போன்ற நிலப்பிரிவுகள் உணர்த்துகின்றன. இப்பிரிவுகளைத் திருத்தொண்டர் புராணம் பின்வரும் பாடலில் விளக்கிக் கூறுகிறது.
தா இல் செம்மணி அருவியாறு இழிவன சாரல் ;
பூவில் வண்டினம் புதுநறவு அருந்துவ புறவம் ;
வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம் ;
நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல்.
(திருத்தொண்டர் புராணம், 1083)
(சாரல்=மலைப்பகுதி; நறவு=தேன்; புறவம்=காடு; வாவி=குளம்;நித்திலம்=முத்து; பரத்தியர்=மீனவ மகளிர்; உணக்குதல்=உலர்த்துதல்)
இவ்வாறு பிரித்துக் கூறப்பட்ட நிலப்பகுதிகள் ஒவ்வொன்றும் தனித்தனி உலகமாகவே இலக்கியங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்த ஆற்றுப் படுகைகளே வரலாற்றுக் காலத் தமிழக அரச வம்சங்களின் மையமாக விளங்கின. சேரர் பெரியாற்றையும், சோழர் காவிரியாற்றையும், பாண்டியர் தாமிரபரணியையும், வைகையையும் மையமாக வைத்து எழுச்சி பெற்றனர். இம்மூவேந்தரில் பாண்டியர் ஆட்சி செய்த நிலப்பரப்பே பெரிதாகக் காணப்பட்டது. சங்க இலக்கியங்கள் சித்திரிக்கும் நிலப்பாகுபாடு கூட நாகரிக நிலையில் பல்வேறு படிகளிலிருந்த சங்க காலத் தமிழகத்தின் நாகரிகத்தையே எடுத்துக் காட்டுகின்றது. எதிர்வரும் பகுதிகளில் ஐவகை நிலப்பாகுபாடுகளைப் பார்ப்போம்.
குறிஞ்சி :-
தமிழகத்தின் மலைப்பகுதிகளில் குறிஞ்சிப் பூ அதிகமாகக் காணப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு பழந்தமிழர் மலைகளையும், அவற்றைச் சார்ந்த இடங்களையும் குறிஞ்சிஎனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழகத்தின் குறிஞ்சி நிலப் பகுதியாக மேற்குக் காற்றாடி மலைகள், கிழக்குக் காற்றாடி மலைகள், நீலகிரி, பழனி, ஆனைமலை போன்றவற்றைக் கூறலாம். இவற்றுள் மேற்குக் காற்றாடி மலைத் தொடர்கள் அரபிக்கடலை அண்டியும், கிழக்குக் காற்றாடி மலைத்தொடர்கள் வங்கக்கடலைச் சார்ந்தும் அமைந்துள்ளன.
இவ்வகையான மலைகளில் வாழ்ந்த மக்கள் குறவர் என அழைக்கப்பட்டனர். இம்மலைப் பகுதியிலும், அடர்ந்த பெருங்காட்டிலும் யானை, புலி, கரடி போன்ற விலங்குகளும், மயில் போன்ற அழகிய பறவைகளும் காணப்பட்டன. சிறுசிறு ஆறுகள், அருவிகள் இக்குறிஞ்சி நிலப்பகுதிக்கு நீர்வளம் தந்தன. இங்கு வாழ்ந்த மக்கள் அவர்களின் நிலப்பகுதியில் அவ்வளவாக மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. இருப்பினும் தேன் எடுத்தல், தினை விதைத்தலையும், வேட்டையாடுதலையும் முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தனர். (இவர்களின் முதன்மைக் கடவுள் முருகன்) இந்நிலப்பரப்பில் முருக வழிபாடு இருந்தது. மேலும் வழிபாட்டு நெறிகளாகப் பலியிடுதல், வெறியாட்டு போன்றவை இருந்ததைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். இங்கு மக்கள் வாழ்ந்த இடங்களைச் சிறுகுடி என்று அழைத்தனர். குறிஞ்சி நில மக்களின் தலைவர்கள் வெற்பன், சிலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
முல்லை :-
காடு அடர்ந்த நிலப்பரப்பே முல்லை நிலமாகும். இந்நிலப்பரப்பிற்குஒரு தனித்துவம் அங்கே காணப்படும் முல்லைப் பூவாகும். இன்றைய திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள் முல்லை நிலத்தைச் சேர்ந்தவைகளாகும். இங்கு வாழ்ந்தோர் ஆயர் அல்லது இடையர்என அழைக்கப்பட்டனர். இவர்களின் முதன்மைக் கடவுள் மாயோன் (விஷ்ணு) இவர்களின் முக்கியமான தொழில் ஆடு மாடுகளை மேய்ப்பதாகும். இவர்கள் இந்நிலப்பரப்பில் கிடைக்கும் பொருட்களான பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றைப் பிற நிலப்பரப்பில் உள்ளவர்களிடம் கொடுத்துப் பண்ட மாற்றாகத் தமக்கு வேண்டியவைகளைப் பெற்றனர். இங்கு மக்கள் வாழ்ந்த இடங்களைச் சேரி என்று அழைத்தனர். இவர்களின் தலைவர்கள் குறும்பொறை நாடன் என்று அழைக்கப்பட்டனர்.
மருதம் :-
ஆற்றுப்படுகைகள் சேர்ந்த வளமான இடங்கள் மருதம் எனஅழைக்கப்பட்டன. இங்குக் காணப்பட்ட மருதப் பூவே இந்நிலத்திற்கு இப்பெயரை வழங்கியது. இவர்களின் முதன்மைக்கடவுள் – இந்திரன், இவர்களின் தொழில்: வேளாண்மை. தமிழக ஆறுகளாகிய காவிரி, பெண்ணாறு, பவானி, நொய்யல், அமராவதி, பாலாறு, தாமிரபரணி, வைகை போன்றன இந்நிலப்பரப்பில் அடங்கும். இந்நில அமைப்பில் அடங்கும் தரை அமைப்பிற்கு ஏற்பத் தமிழக ஆறுகள் வட இந்திய ஆறுகளைப் போல் அல்லாது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியே பாய்கின்றன.
காவிரி ஆறு மைசூர் மாநிலத்திலுள்ள பிரமகிரியிலிருந்து ஊற்றெடுக்கிறது. இவ்விடம் தலைக்காவிரி எனவும் அழைக்கப்படுகிறது. தஞ்சை வரை ஓடி அங்கிருந்து முக்கோண வடிவில் வங்கக்கடலில் இணைகின்றது. கங்கையைப் போன்று காவிரியும் புனித நதியாகக் கருதப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களது தலைநகர்கள் ஆற்றங்கரைகளிலேதான் அமைந்திருந்தன. சேர மன்னருள் ஒரு குறிப்பிட்ட மரபினரது தலைநகரான கரூர் அமராவதி ஆற்றங்கரையிலும், பாண்டியரின் தலைநகராகிய மதுரை வைகை ஆற்றங்கரையிலும் அமைந்திருந்தன.
மருத நிலத்தில் காணப்பட்ட சமமான தரைப் பகுதி, செழிப்புள்ள மண், போதிய நீர் வசதி ஆகியன ஏனைய நிலங்களைவிட இதனை வளமானதாக ஆக்கின. நெல், கரும்பு போன்றவை விளைய ஏற்ற இடமாக அமைந்ததால் இந்நிலப்பரப்பு தன்னிறைவு அடைந்து மக்கள் நிலையாகத் தங்கும் நகர வளர்ச்சிக்கு அடிகோலியது எனலாம். இப்பகுதியில் மக்கள் வாழ்ந்த இடங்கள் நகர், ஊர் என அழைக்கப்பட்டன. இம்மக்களின் தலைவர்கள் ஊரன், மகிழ்நன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
நெய்தல் :-
நெய்தல் பூவே நெய்தல் நிலத்திற்குத் தனித்துவத்தை அளித்தது. தமிழகத்தைச் சுற்றியுள்ள கடற்கரை நிலப்பரப்பு நெய்தல் நிலமாகும். இவர்களின் முதன்மைக்கடவுள் வருணன். இங்கு வாழ்ந்த மக்கள் பரதவர், நுளையர், வலைஞர் என அழைக்கப்பட்டனர். மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், முத்துக் குளித்தல் போன்றவை இங்கு வாழ்ந்த மக்களின் முக்கியத் தொழிலாக அமைந்திருந்தன. பண்டமாற்று முறையே இந்நிலத்தில் நடைபெற்றதாகத் தெரிகின்றது. இங்கு மக்கள் வாழ்ந்த இடங்களைப் பாக்கம், பட்டினம் என அழைத்தனர். இவர்களின் தலைவர்கள் சேர்ப்பன், புலம்பன் என்று அழைக்கப்பட்டனர்.
கடற்கரைப் பகுதிகளான இந்நிலப் பகுதியில் துறைமுகங்கள் யாவும் அமைந்திருந்தன. கடல் வழியாகப் பல அயல்நாடுகளுடன் வாணிபம் நடைபெற்றது. தமிழகத்து மிளகு முதலிய நறுமணப் பொருள்களுக்கும் முத்துகளுக்கும் ஈடாகப் பொன்னையும், மதுவையும் பண்டமாற்றாகப் பெற்றுச் செல்லக் கிரேக்கரும், உரோமானியரும் மரக்கலங்களில் வந்து சென்றதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. எளிய மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வந்தாலும் செல்வச் செழிப்பாக வாழ்வைக் களித்தனர். வாணிபம் வளர்ச்சியுற்றதால் துறைமுகப்பட்டினங்கள், நகரங்கள் வளர்ச்சி பெற்றன. சேரரின் துறைமுகங்களாக முசிறி, தொண்டி, மாந்தை, நறவு ஆகியன விளங்கின. சோழரின் துறைமுகப் பட்டினங்களாகக் காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், பொதுகை அல்லது அரிக்கமேடு ஆகியன விளங்கின. கொற்கை, சாலியூர், காயல் ஆகியன பாண்டியரின் துறைமுகங்களாகும். சங்க இலக்கியம் பெருமைப்படுத்திக் கூறும் ‘மருங்கூர்ப்பட்டினமும்’ நெய்தல் நிலப்பரப்பில் இருந்தது.
விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து’
(அகநானூறு -227: 19 -20)
பாலை :-
பழந்தமிழகத்தின் வறட்சியான நிலப்பரப்பினைப் பாலை நிலம் என அழைத்தனர். இப்பகுதியில் காணப்பட்ட பாலைப்பூவே இப்பெயருக்குக் காரணமாக அமைந்தது. மேற்கூறிய நால்வகை நிலங்களும் வறட்சி அடையும்போது அவை பாலை நிலம் என்று அழைக்கப்பட்டன. இவர்களின் முதன்மைக் கடவுள் – கொற்றவை, இவர்களின் தொழில்: கொள்ளையடித்தல்
முல்லை நிலமாகிய காடுகளும், குறிஞ்சி நிலமாகிய மலைகளும் நெடுங்காலம் மழை பெய்யாமையால் காய்ந்து வறட்சி அடையும் போது பாலை என்னும் நிலப்பரப்பாகக் காட்சி அளிக்கும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இந்நிலப்பரப்பில் வாழ்ந்தவர்களை மறவர், எயினர், வேடர் எனப் பலவாறு அழைத்தனர். இம்மக்கள் வாழ்ந்த பகுதிகளைக் குறும்பு என அழைத்தனர். இவர்களின் தலைவர்களாக மீளி, காளை என்ற விருதுப்பெயர் கொண்டோர் விளங்கினர்.

திருவள்ளுவர் விருது பட்டியல் :-



தமிழ்நாடு அரசு, உலகப் பொதுமறையாம் திருக்குறள் நெறிபரப்பும் பெருநோக்கில் ஆண்டுதோறும் தைத் திங்கள் இரண்டாம் நாளில் திருவள்ளுவர் திருநாள் விழாவினை அரசு விழாவாகச் சீரும் சிறப்புமாக நடத்திவருகிறது. அந்தவகையில் திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர் ஒருவருக்கு 1986 முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் இவ்விருது வழங்கப் பட்டு வருகிறது.

இதுவரை திருவள்ளுவர் விருது பெற்றோர்:

*    1986 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்
*    1987- கி.ஆ.பெ. விசுவநாதம்
*    1988- ச. தண்டபாணி தேசிகர்
*    1989 - வ.சு. ப. மாணிக்கம்
*    1990 - கு.ச. ஆனந்தன்
*    1991 - சுந்தர சண்முகனார்
*    1992 - நாவலர் இரா. நெடுஞ்செழியன்
*    1993 - கல்லை தே. கண்ணன்
*    1994 - திருக்குறளார் வீ. முனுசாமி
*    1995 -க. சிவகாமசுந்தரி
*    1996 - முனைவர் மு. கோவிந்தசாமி
*    1997 - பேராசிரியர் கு. மோகனராசு
*    1998 - முனைவர் இரா. சாரங்கபாணி
*    1999 - முனைவர் வா. செ. குழந்தைசாமி
*    2000 - த.சி.க. கண்ணன்
*    2001 - பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன்
*    2002 - முனைவர் இ. சுந்தரமூர்த்தி
*    2003 - முனைவர் கு. மங்கையர்க்கரசி
*    2004 - இரா. முத்துக்குமாரசாமி
*    2005 - பெரும்புலவர் ப. அரங்கசாமி
*    2006 - முனைவர் ஆறு. அழகப்பன்
*    2007 - முனைவர் . க. ப. அறவாணன்
*    2008 - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
*    2009 -முனைவர் பொற்கோ
*    2010 - ஐராவதம் மகாதேவன்
*    2011 - முனைவர் பா. வளவன் அரசு
*    2012 - புலவர் செ. வரதராசன்
*    2013 - டாக்டர் ந. முருகன் (சேயோன்)
*    2014 - கவிஞர் யூசி
* திருக்குறளார் வி. முனுசாமி இயற்கை எய்திய காரணத்தால் இவர்தம் மரபுரிமையருக்கு விருது வழங்கப்பட்டது.
விருதுகளின் பட்டியல் மற்றும் விருது பெற்றவர்களின் பட்டியல் :-

பேரறிஞர் அண்ணா விருது
பேரறிஞர் அண்ணா பகுத்தறிவு, திராவிட கருத்துகளை தனது எழுத்தாற்றல், பேச்சு, நாடக படைப்புகள் போன்றவற்றால் பரப்பியவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளர். திராவிட முன்னேற்ற கழகத்தை 1949-இல் துவக்கி, 1967- 1969 வரை தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றியவர். இவரது பெயரால் பேரறிஞர் அண்ணா விருது என தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

இதுவரை பேரறிஞர் அண்ணா விருது பெற்றவர்கள்:
*    2006 - ஆர். எம். வீரப்பன்
*    2007 - சாரதா நம்பி ஆரூரான்
*    2008 - விருது வழங்கப்படவில்லை
*    2009 - முனைவர் அவ்வை நடராஜன்
*    2010 - கோ. ரவிக்குமார்
*    2011 - இரா.  செழியன்
*    2012 - கே.ஆர். பி. மணிமொழியான்
*    2013 - பண்ருட்டி ச. இராமச்சந்திரன்

அண்ணல் அம்பேத்கர் விருது
இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கியவர், நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர், தீண்டாமை ஒழிய போராடியவர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக போராடியவர் பாபாசாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். சமூக நீதிக்காக பாடுபடும் சான்றோர் ஒருவருக்கு இவரது பெயரில் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது.

இதுவரை அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றவர்கள்:
*    2006 - தொல். திருமாவளவன்
*    2007 - ஆர். நல்லக்கண்ணு
*    2008 - விருது வழங்கப்படவில்லை
*    2009 - கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
*    2010 - யசோதா
*    2011 - சு. காளியப்பன்
*    2012 - தா. பாண்டியன்
*    2013 - பேராயர் எம். பிரகாஷ்

பெருந்தலைவர் காமராஜர் விருது
தமிழகத்தின் முதல்வராக பதவிவகித்து, மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்தி, எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர் காமராசர். பெருந்தலைவர், கிங்மேக்கர் என புகழப்பட்ட இவரது பெயரில் பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படுகிறது.

இதுவரை பெருந்தலைவர் காமராசர் விருதுபெற்றோர்:
*    2006 - திருநாவுக்கரசு
*    2007 - மாரிமுத்து
*    2008 - விருது வழங்கப்படவில்லை
*    2009 - விருதுநகர் இரா. சொக்கர்
*    2010 - ஜெயந்தி நடராசன்
*    2011 - திண்டிவனம் ராமமூர்த்தி
*    2012 - சிங்கார வடிவேல்
*    2013 - கி. அய்யாறு வாண்டையார்


முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதுதமிழ்நாடு அரசு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை 2000- ஆம் ஆண்டில் தோற்றுவித்தது. இவ்விருது ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.

இதுவரை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றவர்கள்:
*    2000 - கோ. முத்துப்பிள்ளை
*    2001 - முனைவர் கா. காளிமுத்து
*    2002 - முனைவர் மு. தமிழ்க்குடிமகன்
*    2003 - முனைவர் ச.வே. சுப்பிரமணியன்
*    2004 - முனைவர் பு.பா. இராஜராஜேஸ்வரி
*    2005 - விருது வழங்கப்படவில்லை
*    2006 - விருது வழங்கப்படவில்லை
*    2007 - கவிஞர் கா. வேழவேந்தன்
*    2008 - பேராசிரியர் த. பழமலய்
*    2009 - தாயம்மாள் அறவாணன்
*    2010 - முனைவர் இரா. மதிவாணன்
*    2011 - முனைவர் இரா. மோகன்

தந்தை பெரியார் விருது
தமிழக மக்களிடையே பரவியுள்ள மூடநம்பிக்கைகளை அகற்றவும், சாதி ஒழிக்க, பெண் அடிமைத்தனத்தை எதிர்க்க, திராவிட இனத்தை மேம்படுத்த பகுத்தறிவு பிரச்சாரம் செய்தவர் தமிழர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி. இவர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பெரியார் கருத்துகளை பரப்புவதில் பணியாற்றிய ஒருவருக்கு ஆண்டுதோறும் பெரியார் விருது வழங்கப்படுகிறது.

இதுவரை தந்தை பெரியார் விருதை பெற்றவர்கள்:
*    1999 - நன்னிலம் நடராஜன்
*    2000 - திருச்சி என். செல்வேந்திரன்
*    2001 - புலமைப்பித்தன்
*    2002 - ஜெகவீரபாண்டியன்
*    2003 - துரைகோவிந்தராஜன்
*    2004 - பி.வேணுகோபால்
*    2005 - இரா. செழியன்
*    2006 - நடிகர் சத்யராஜ்
*    2007 - கவிதைப்பித்தன்
*    2008 - விருது வழங்கப்படவில்லை
*    2009 - நக்கீரன் கோபால்
*    2010 - சாமிதுரை
*    2011 - டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன்
*    2012 - டாக்டர் கோ. சமரசம்
*    2013 - சுலோச்சனா சம்பத்


போட்டித் தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் சிலவற்றை பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.


திருக்குறள்
தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,
வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை
வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை.

சிலப்பதிகாரம்
செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம்

சிலப்பதிகாரம் / மணிமேகலை - இரட்டைக் காப்பியங்கள்

சீவக சிந்தாமணி - மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்

அகநானூறு - நெடுந்தொகை

கலித்தொகை - கற்றறிந்தார் ஏற்கும் நூல்

மணிமேகலை / குண்டலகேசி - பௌத்த காப்பியங்கள்

மணிமேகலை - மணிமேகலை துறவு, துறவு நூல்,
பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம்

புறநானூறு - புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்

பட்டினப்பாலை - வஞ்சி நெடும் பாட்டு

பெரும்பாணாற்றுப்படை - பாணாறு

குறிஞ்சிப்பாட்டு - பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு

திருமுருகாற்றுப்படை - புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை

நாலடியார் - வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள்

நேமிநாதம் - சின்னூல் என்பது

நறுந்தொகை - வெற்றி வேட்கை, திராவிட வேதம்,
தமிழ் மறை வேதம், திருவாய் மொழி

பெரிய புராணம் - திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து
மூவர் புராணம்

இராமாயணம் - ராமகாதை, ராம அவதாரம்,
கம்பராமாயணம், சித்திரம்

பழமொழி - முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு

ராமாவதாரம் - கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர்

தாயுமானவர் பாடல்கள் - தமிழ் மொழியின் உபநிடதங்கள்

குற்றாலக் குறவஞ்சி - குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம்

பிள்ளைத் தமிழ் - குழந்தை இலக்கியம்

பள்ளு - உழத்திப்பாட்டு

பரிபாடல் / கலித்தொகை - இசைப்பாட்டு

பெருங்கதை - அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை

திருமந்திரம் - தமிழர் வேதம்

திருவாசகம் - தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி

நாலாயிர திவ்ய பிரபந்தம் - தமிழ் வேதம்

தொன்னூல் விளக்கம் - குட்டி தொல்காப்பியம்

திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி - குட்டி திருவாசகம்

பிள்ளைத் தமிழ் - பத்து பருவங்களைக் குறிக்கும் நூல்

திருவள்ளுவ மாலை - திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல்

பள்ளு - புலன் எனும் சிற்றிலக்கிய வகை

இலக்கண விளக்கம் - தூதின் இலக்கணம்

நந்தி கலம்பகம் - தமிழின் முதற்கலம்பகம்

புறநானூறு - தமிழர்களின் கருவூலம்

சதுரகாதி - 96 வகை சிற்றிலக்கிய நூல்

தேம்பாவணி - கிருஸ்துவர்களின் களஞ்சியம்

தொல்காப்பியம் /திருக்குறள் - தமிழரின் இரு கண்கள்

இராமாயணம் - வடமொழியின் ஆதி காவியம்

திருவிளையாடற் புராணம் - 64 புராணங்களைக் கூறும் நூல்

பத்துப்பாட்டு - இயற்கை ஓவியம்

கலித்தொகை - இயற்கை இன்பக்கலம்

கம்பராமாயணம் - இயற்கை பரிணாமம்

சிலப்பதிகாரம் /மணிமேகலை - இயற்கை இன்ப வாழ்வு நிலையம்

நாலடியார் - நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல்

திருப்பாவை - பாவைப்பாட்டு

கலம்பகம் - பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல்
தமிழகத்தில் வாழும் நாம் நம் தமிழகத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வோம் :-
" தமிழகம் 25 "

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்.
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)
ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா சிறப்பு :-


ஐஎன்எஸ் விக்ரமாதித்யா (சமஸ்கிருதம்: विक्रमादित्य, Vikramaditya, "Brave as the Sun") ஆனது முன்னாள்சோவியத் ஒன்றியத்தின் வானூர்தி தாங்கிக் கப்பலான அட்மிரல் கோர்ஷ்கோவ் கப்பலின் புதிய பெயராகும். இது இந்தியாவால் இந்தியக் கடற்படைக்காக வாங்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுக்குப் பிறகு விக்ரமாதித்யா முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் நடைபெறும் விழாவில், இக்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்படுகிறது.
விக்ரமாதித்யா 1978-1982ல் கருங்கடல் கப்பல் கட்டும் தளம், மிகொளைவ், உக்ரைனில் கட்டப்பட்ட கிவ் வகுப்பு வானூர்தித் தாங்கிக் கப்பலின் மாறுதல் செய்யப்பட்ட கப்பல் ஆகும். இந்தக் கப்பல் தற்போது உருசியாவின் செவ்மாஷ் கப்பல் கட்டும் தளத்தில் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது ரூ.14,483 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • கப்பலின் மொத்த எடை 44,500 டன்கள். 
  • நீளம் - 284 மீட்டர்
  • உயரம் - 60 மீட்டர்
  • நீர்மூழ்கிக் கப்பல்களை தேடிச் சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகள் 28
  • 20க்கும் மேற்பட்ட மிக்-29 கே ரக விமானங்களை தாக்கி செல்லும் திறன்
  • கண்காணிப்பை மேற்கொள்வதற்கு உதவியாக 10 ஹெலிகாப்டர்களை சுமந்துச் செல்லும்.
  • போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகள்
  • இந்தக் கப்பலால், தன்னை சுற்றியுள்ள 700 கடல் மைல்கள் தொலைவுக்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியும்.
  • 1,600-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு இயங்கும்.
  • ஒரே சமயத்தில் 7,000 முதல் 13,000 கடல் மைல்கள் பயணம் செய்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியும்

திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்கள் :- 


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(TNPSC)  நடத்தப்படும் தேர்வுகளிலபொதுத்  தமிழ் பகுதியில் பகுதி ஆ.1.திருக்குறள் தொடர்பான செய்திகள்மேற்கோள்கள்  தொடரைநிரப்புதல் பகுதியில் அன்பு, பண்பு, கேள்விஅறிவு, அடக்கம், ஒழுக்கம்,  பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை,  பெரியாரைத்துணைக் கோடல்,பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்.  போன்ற 19 அதிகாரம் மட்டும் இடம் பெற்றுள்ளன. 

திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்களை பார்ப்போம்.   "இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை மனிதன் இறைவனுக்குச் சொன்னது  திருவாசகம் மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்" மனித வாழ்வின்  முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள் இன்பம் அல்லது காமம்  ஆகியவற்றைப்பற்றி விளக்கும் தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற  நூல் திருக்குறள்.   இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறளை இயற்றியவர்  திருவள்ளுவர். இவரது காலம் கி.மு.31 என்று கூறுவர். இதை தொடக்கமாகக்  கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. இவரது ஊர், பெற்றோர்  குறித்த முழுமையான செய்திகள்  கிடைக்கப்பெறவில்லை. .  

திருவள்ளுவர் செஞ்ஞாப்போதார், தெய்வப்புலவர், நாயனார், முதற்பாவலர்,  நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில்புலவர் என பல சிறப்புப்  பெயர்களால் போற்றப்படுகிறார்.   திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறிஸ்து ஆண்டு (கிபி) + 31 =  திருவள்ளுவர் ஆண்டு. எ.கா: 2014 +31 = 2045 (கி.பி.2014-ஐ திருவள்ளுவர் ஆண்டு 2045  என்று கூறுவோம்) 

* திரு+குறள்= திருக்குறள் 

* திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.

* திருக்குறள் இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.

* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812 

* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

* திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக 133 அதிகாரங்களையும், 1330 குறள்களையும் கொண்டது.

* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700 

* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

* திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல்  வகையாகிய குறட்பாக்களால் ஆனது. 

* திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால்,  காமத்துப்பால் ஆகியவை ஆகும்.

* அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள்,  காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.

* திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்: குறிப்பறிதல் -  (பொருட்பால் - அதிகாரம் 71) குறிப்பறிதல் - (காமத்துப்பால் - அதிகாரம் 110)

* திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள்     எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும்,    யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.

* திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி 

* திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங 

* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் 

* திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

* திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

* திருக்குறளில் 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

* திருக்குறள் மாந்தர்கள் தம் அகவாழ்வில் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்வில் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான        அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

* திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின்    திரட்டில்இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.

* திருக்குள் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும்         பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும்         விளக்குகிறது. 

* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம், குவளை 

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
 
* திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.

* திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.

* திருக்குறளில் ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்          எடுத்தாளப்பட்டுள்ளது.