Wednesday, 2 July 2014

போட்டித் தேர்வில் சில வினாக்களுக்கு கொடுத்திருக்கும் சொல்லுக்கு பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து பொருத்த வேண்டும். 



சொல்லும் பொருளும்     சொல்லும் பொருளும்
மாருதம் - காற்று                                           செரு - போர்
செறு - வயல்                                                   வேய் - மூங்கில்
தவ்வை - மூதேவி                                         மஞ்ஞை - மயில்
புரை - குற்றம்                                                  தீயுழி - நரகம்
தாளாண்மை - முயற்சி                               களிறு - ஆண் யானை
பிடி - பெண் யானை                                      அசவாமை - தளராமை
உகிர் - நகம்                                                       ஏதம் - துன்பம்
கூலம் - தானியம்                                           புரவி - குதிரை
மல்லல் - வளப்பம்                                        உம்பர் - தேவர்
குருசு - சிலுவை                                             மருள் - மயக்கம்
தொழும்பர் - தொண்டர்                               நறை - தேன்
அண்டர் - தேவர்                                             தொடை - மாலை
அஞ்சுமின் - கூற்றம்                                     களி - மகிழ்ச்சி
அறிமின் - அறநெறி                                      வட்டு - சூதாட்டக்கருவி
பொறுமின் - கடுஞ்சொல்                           மறு - குற்றம்
தகவு - நன்னடத்தை                                     பூதலம் - உலகம்
முண்டகம் - தாமரை                                    படி - நிலம்
கமுகு - பாக்கு                                                 பொருப்பு- மலை
மத்தமான் - யானை                                      கால் - காற்று
உழை - மீன்                                                      வாவி - குளம்
கிளைஞர் - உறவினர்                                  காளர் - காடு
சிவிகை - பல்லக்கு                                      தீம் - இனிமை
கொண்டல் - மேகம்                                     பிணிமுகம் - மயில்
தார் - மலை                                                     தரு - மரம்
புள் - பறவை                                                   விழுமம் - சிறப்பு
வரை - மலை                                                 மரை - மான்
விசும்பு - வானம்                                           நல்குரவு - வறுமை
சலம் - வஞ்சனை                                        கஞ்சம் - தாமரை
ஊற்றுழி - துன்புறும் காலம்                    நுதல் - நெற்றி
கேழல் - பன்றி                                               புனை - தெப்பம்
சோரன் - திருடன்                                        ஏறு - ஆண்சிங்கம்
பிணவு - பெண்                                              பல்லவம் - தளிர்
பொலம் - அழகு                                            நாவாய் - படகு ,கப்பல்
ஆகடியம் - ஏளனம்                                     பூதலம் - உலகம்
நன்னார் - பகைவர்                                     வித்து - விதை
நகை - சிரிப்பு                                                ஞாலம் - உலகம்
மாசு - குற்றம்                                               கோதை - மாலை
புனல் - நீர்                                                       தத்தை - கிளி
தொன்மை - பழமை                                    படை - அடுக்கு
ஓங்க - உயர                                                  பள்ளி - படுக்கை
பளு - சுமை                                                    விசை - வேகம்
வெற்பு - வந்தனை                                      குழவி - குழந்தை
வடு - தழும்பு                                                  சென்னி - தலை
பண் - இசை                                                    புள் - பறவை
நாண் - கயிறு                                                மேதினி - உலகம்
பார் - உலகம்                                                 மாறன் - மன்மதன்
சினம் - கோபம்                                             கஞ்சம் - தாமரை
புரவி - குதிரை                                              ஒழுக்கு - ஒழுக்கம்
களி - யானை                                               அன்ன - போல
மறவன் - வீரன்                                            ககம் - பறவை
யாக்கை - உடல்                                          பீழை - பழி
நலிவு - கேடு                                                தகவு - நன்னடத்தை
மாடு - செல்வம்                                          காணம் - பொன்
அனல் - தீ, நெருப்பு                                    சுடலை - சுடுகாடு
தாரம் - மனைவி                                         சாந்தம் - சந்தனமுகம்
விழைதல் - விருப்பம்                               தறு - வில்
குரவர் - ஆசிரியர்                                       கூவல் - கிணறு
சுரும்பு - வண்டு                                          சீலம் - ஒழுக்கம்
இடுக்கண் - துன்பம்                                   செய் - வயல்
துன்று - செறிவு                                           மடு - ஆழமான நீர்நிலை
கமடம் - ஆமை                                            வேணி - சடை

       மேலும் சொற்களைத் தெரிந்து கொள்ள பள்ளி தமிழ்ப் பாடநூலிலுள்ள அருஞ்சொற்பொருள் பகுதியினை வாசியுங்கள்..

Tuesday, 1 July 2014

நூல்களும் அதன் நூலாசிரியர்களும் :


பாரதியார் - குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பாபாட்டு, பாஞ்சாலிசபதம், ஞானரதம், அக்னி குஞ்சு,பூலோக ரம்பை, சந்திரிகையின் கதை, புதியஆத்திச்சூடி, சீட்டுக் கவி
 
பாரதிதாசன் - குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு.
அழகின் சிரிப்பு, குறிஞ்சித் திரட்டு, இளைஞர் இலக்கியம், எதிர்பாராத முத்தம், நல்ல தீர்ப்பு,பிசிராந்தையார்.
 
அறிஞர் அண்ணா - ஓர் இரவு, நீதித் தேவன் மயக்கம், வேலைக்காரி,
ரங்கோன் ராதா, தம்பிக்கு, கண்ணீர் துளிகள், பிடிசாம்பல், கலிங்கராணி, பார்வதி பி.ஏ., தசாவதாரம்,நல்ல தம்பி.
 
கலைஞர் மு.கருணாநிதி - குறளோவியம், சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, பொன்னர்சங்கர், ரோமாபுரி பாண்டியன், தூக்குமேடை
 
கண்ணதாசன் -ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், சேரமான்
காதலி, மாங்கனி, சிவகங்கை சீமை

புலவர் குழந்தை - ராவணகாவியம், காமஞ்சரி,கொங்குநாடு, நெருஞ்சிப் பழம்

சுரதா - தாயின் முத்தம், துறைமுகம், தேன்மழை
 
வாணிதாசன் - கொடி முல்லை, எழிலோவியம், தமிழச்சி,தொடுவானம்.
 
நாமக்கல் கவிஞர் - மலைக்கள்ளன், சங்கொலி, கவிதாஞ்சலி, என் கதை,அவனும் அவளும், தமிழன் இதயம்.

அருணகிரிநாதர் - திருப்புகழ்
 
புகழேந்தி - நளவெண்பா
 
சேக்கிழார் - பெரியபுராணம்
 
கச்சியப்பர் - கந்தபுராணம்
 
குமரகுருபரர் -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை
பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், நீதிநெறிவிளக்கம், மதுரைக்கலம்பகம்

உமறுபுலவர் - சீறாப்புராணம், சீதக்காத்தி நொண்டி நாடகம்
ஒட்டக்கூத்தர் - தக்கையாப் பரணி, மூவருலா, ராஜராஜன் உலா,
குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ்.
 
ஔவையார் -மூதுரை, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி.
இராமலிங்க அடிகளார் - திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம்.
 
ஜெயங்கொண்டார் - கலிங்கத்துப்பரணி.

கம்பர் - சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி.சிலை எழுபது, ஏர் எழுபது.
 
திரிகூட ராசப்பர் - குற்றாலக் குறவஞ்சி, தலபுராணம், அந்தாதி.

வில்லிபுத்தூராழ்வார் -வில்லிபாரதம், சொக்கநாதர் உலா.

அதிவீர ராமபாண்டியன் - நைடதம், வெற்றிவேட்கை.
 
வீரமா முனிவர் - தேம்பாவனி, சதுரகராதி, தொன்னூல் விளக்கம்
திருக்காவலூர்க் கலம்பகம், கலிவெண்பா.

மீனாட்சி சுந்தரம்பிள்ளை- மனோன்மணீயம், சேக்கிழார் பிள்ளைத்தமிழ்.
 
எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை - இரட்சண்ய யாத்ரீகம்
 
திரு.வி.க. -முருகர் அல்லது அழகு, பெண்ணின்பெருமை,பொதுமை வேட்டல், இளமை விருந்து.
 
தேசிய வினாயகம் பிள்ளை - ஆசிய ஜோதி, உமர்கயாம் பாடல்கள்.
 
கல்கி - பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு, கள்வனின் காதலி, அலையோசை
 
சாண்டில்யன் - மலைவாசல், கடல்புறா, யவனராணி, கன்னி மாடம்
 
புத்தமித்திரர் - வீரசோழியம்
 
ஐயனாரிதனார் - புறப்பொருள்
 
அமிர்தசாகரர் - யாப்பெருங்கலம்
 
ஆண்டாள் - திருப்பாவை, நாச்சியார் திருமொழி

மாணிக்கவாசகர் திருவாசகம்,திருக்கோவையார்,திருச்சிற்றம்பலக்கோவை
 
முடியரசன் - பூங்கொடி, காவிரிப் பாவை, வீரகாவியம்

ராஜம் ஐயர் - கமலாம்பாள் சரித்திரம்
 
மு.வரதராசனார் - கள்ளோ காவியமோ, அகல் விளக்கு, கரித்துண்டு, பெற்ற மனம், மண் குடிசை

அண்ணாமலை செட்டியார் - காவடிச்சிந்து
வேதநாயகம் பிள்ளை - பிரதாப முதலியார் சரித்திரம், பகுதிநூல் திரட்டு

நூல்களையும் நூலாசிரியர்களையும் பற்றி மேலும் அறிந்து கொள்ள பள்ளி பாடப்புத்தகங்களை வாசியுங்கள்..